நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் நேற்று முன்தினம் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டு கிடந்த வீடியோ சமூக லைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, உணவு விநியோகம் செய்த தனியார் பார்சல் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம் விதித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இதுகுறித்து மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவு பார்சல் மூடியில் வண்டு இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. தவறை உறுதி செய்து பயணியிடம் மன்னிப்பு கோரப்பட்டது.
இந்நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கு உணவு விநியோகம் செய்யும் நெல்லை உணவு நிறுவனத்தின் உணவு கூடத்தை ஆய்வு செய்து அலட்சியமாக செயல்பட்ட பார்சல் விநியோக தனியார் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments