Ad Code

Responsive Advertisement

'வாஷர், வால்வு' சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? Gas Cylinder சரிபார்த்து வாங்க அறிவுரை

 




வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டர் வழங்கும் போது, 'வாஷர், வால்வு' சரியாக பொருத்தப்பட்டு உள்ளனவா என்பதை பரிசோதித்து வழங்குவதை, இந்தியன் ஆயில் நிறுவனம் கட்டாயப்படுத்தி உள்ளது. இந்த சோதனையை ஊழியர்கள் மேற்கொள்ளவில்லை எனில், சிலிண்டர் ரசீதில் உள்ள தொலைபேசி எண்ணில் வாடிக்கையாளர்கள் புகார் தரலாம்.


இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தமிழகத்தில், 1.32 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.


காஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை இணைக்க ரப்பர் குழாய், ரெகுலேட்டர் பயன்படுத்தப்படுகிறது. சில சிலிண்டர்களில் ரெகுலேட்டர் இணைக்க கூடிய இடத்தில் உள்ள, 'வாஷர், வால்வு' சரியாக பொருத்தப்படாமல் உள்ளது.


இதை சரிபார்க்காமல் வாடிக்கையாளர்களும் வாங்குகின்றனர். காஸ் அடுப்பை, 'ஆன்' செய்யும் போது, காஸ் கசிவு ஏற்படுகிறது. இதைத்தடுக்க, டெலிவரி செய்யும் போதே சிலிண்டரில், வாஷர், வால்வு சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து வழங்குவதை, இந்தியன் ஆயில் கட்டாயமாக்கி உள்ளது.


இதுகுறித்து, இந்தியன் ஆயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:


வீட்டிற்கு சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்களிடம் சோதனை கருவிகள் உள்ளன. அதை பயன்படுத்த சொல்லி, சிலிண்டரில் வாஷர், வால்வு சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும்.


இதற்கான கருவிகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வாஷர், வால்வு சரியாக இல்லாத சிலிண்டர்களை, டெலிவரி வாங்காமல் திருப்பி அனுப்பலாம். வேறு சிலிண்டர் சரிபார்த்து வழங்கப்படும். இந்த சோதனைகளை செய்யாமல், சிலிண்டர் வாங்க வேண்டாம். சோதனை செய்ய மறுக்கும் ஊழியர்கள் குறித்து புகார் அளிக்கலாம்.


ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் குழாய் மாற்ற வேண்டும். எனவே, ஐந்து ஆண்டுக்கு மேல் ரப்பர் குழாய் பயன்படுத்துவோர், காஸ் ஏஜென்சிகளை அணுகி, ரப்பர் குழாயை மாற்றி கொள்ளலாம். காஸ் அடுப்பு சரியான இடத்தில் இருக்கிறதா, ரெகுலேட்டர் சரியாக சிலிண்டரில் இணைக்கப்பட்டு உள்ளனவா உள்ளிட்ட சோதனைகளையும் ஊழியர்கள் செய்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருப்புக்கு பதில் வெள்ளை கலர் ஏன்?


'ஆன், ஆப்' செய்வதற்கு கருப்பு கலர், 'சுவிட்ச்' உடன் கூடிய ரெகுலேட்டர்கள் வழங்கப்பட்டன. தற்போது, பல வீடுகளில் அந்த கலரில் உள்ளன. இரவில் கருப்பு நிற சுவிட்ச்சை பார்க்கும் போது, 'ஆப்'பில் இருக்கிறதா என பலருக்கு தெரியவில்லை.


இதனால், வெள்ளை நிற சுவிட்ச் உடன் கூடிய ரெகுலேட்டர் வழங்கப்படுகிறது. இது, கடந்த இரு ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருப்பதாக, ஏஜென்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement