பொதுவாக முதுகு வலி முதல் மூட்டு வலிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன .இந்த வலியை எப்படி ஒரு வழி பண்ணலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1. முதுகு வலிக்கு நமது சக்திக்கு மீறிய அதிக பளுவுள்ள பொருளை தூக்குவது ,அதிக உடற் பயிர்ச்சி செய்வது ,மாடிப்படிக்கட்டு ஏறுவது போன்ற பல்வேறு காரணங்கள் .
2.மேலும் சில வாய்வை உண்டாக்கும் உணவு பொருளை சாப்பிட்டாலும் இப்படி முதுகு வலி உண்டாகும் .
3.முதுகு வலியுள்ளஇடத்தில் ஐஸ் கட்டிகளை பையில் போட்டு சிறிது நேரம் வைத்திருக்கலாம்.
4.முதுகு வலி குணமாக ஓய்வு அவசியம் ஆனால் நீடித்த படுக்கை ஓய்வு பிரச்சனையை மோசமாக்கும்.
5.இந்த முதுகு வலிக்கு காரணத்தைக் கண்டறிய எக்ஸ்ரே போன்ற சோதனைகளைப் பெறவும்.
6.இந்த முதுகு வலிக்கு மருத்துவரிடம் சென்றால் தசை தளர்த்திகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
7.முதுகு வலி குணமாக அடிக்கடி கொள்ளு ரசம் வைத்து குடிக்கலாம்
8.முதுகு வலிக்கு ஒரு சுடுநீர் உள்ள அண்டாவில் சிறிது நேரம் அமர குணமாகும்
உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
- கொள்ளு - 50 கிராம்
- மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
- பெருங்காயம் - தேவைக்கேற்ப
- சீரகம் - அரை ஸ்பூன்
- தக்காளி - 1
- புளி - தேவைக்கேற்ப
- உப்பு - தேவைக்கேற்ப
- மிளகு - அரை ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு
- கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
- பூண்டு - 3 பல்
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - சிறிதளவு
செய்முறை
கொள்ளை நன்றாக சுத்தம் செய்து, பத்திரத்தில் போட்டு லேசாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், மிக்ஸியில் கொள்ளை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பிறகு மிக்ஸியில், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில், 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதையும், அரைத்த கொள்ளையும் அதில் போட்டு வாசம் போகும்வரை நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர், மஞ்சள்தூள், பெருகாயத்தூள் சேர்த்து, அதில் புளி கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
நுரை வந்ததும் உடனே அடுப்பை அணைத்துவிட வேண்டும். ஆரோக்கியமான கொள்ளு ரசம் ரெடி.
இதை வாரத்திற்கு 3 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறையும்.
0 Comments