ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு 30 கிலோ மீட்டர் தூரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடந்து வந்தார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் சேலம் வந்தார்.
நேற்று ஓமலூர் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இரவு ஏற்காட்டில் தங்கிய அவர், இன்று சேலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
ஏற்காட்டில் தங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏற்காடு அசம்பூரில் இருந்து சேலத்திற்கு நடந்தே வந்தார். இன்று அதிகாலை பனியும், மழைத்தூறலும் விழுந்து கொண்டிருந்த நேரத்தில் காலை 5 மணிக்கு வாக்கிங் புறப்பட்டார்.
கொண்டைஊசி வளைவு மெயின்ரோடு வழியாக அவர் ஓட்டமும், நடையுமாக வந்தார். அசம்பூரில் இருந்து சேலம் அடிவாரம் வரை சுமார் 30 கிலோ மீட்டர் தூரமாகும். இந்த தூரத்தை அவர் 3 மணி நேரத்தில் கடந்து சேலத்திற்கு வந்தார். சேலம் அடிவாரம் வந்த அவர் அதன்பிறகு காரில் ஏறி, ஆய்வு மாளிகைக்கு வந்தார்.
0 Comments