Ad Code

Responsive Advertisement

சென்னை - நாகர்கோவில் / மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்கள் - கட்டணம் எவ்வளவு? எப்போது புறப்படும்?

 



சென்னை எழும்பூர் டூ நாகர்கோவில், மதுரை - பெங்களூர் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கட்டணம் எவ்வளவு?, எந்தெந்த ஸ்டாப்களில் நின்று செல்லும்? எத்தனை மணிக்கு புறப்படும்? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.


தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலையும், மதுரை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயிலையும் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


வந்தே பாரத் ரயில் 


தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை - நெல்லை, பெங்களூர் - சென்னை, சென்னை - விஜயவாடா, கோவை - பெங்களூர், சென்னை - கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.


கட்டணம் எவ்வளவு? 


மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். தற்போது இந்த ரயிலில் பயணிக்க கட்டணம் எவ்வளவு என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, உணவுடன் சேர்த்து: 


* சென்னை எழும்பூர் - நாகர்கோவில் (சேர்கார் கட்டணம் - ரூ.1760), (எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ.3240)

* சென்னை எழும்பூர் - நெல்லை (சேர்கார் - ரூ.1665), (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.3055)

* எழும்பூர் - கோவில்பட்டி (சேர்கார் - ரூ.1350) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2620)

* எழும்பூர் - மதுரை (சேர்கார் - ரூ.1,200) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,295)

* எழும்பூர் - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.1105) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2110)

* எழும்பூர் - திருச்சி (சேர்கார் - ரூ.955) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1790)

* எழும்பூர் - விழுப்புரம் (சேர்கார் - ரூ.545) - (எக்சிகியூட்டிவ் சேர்கார். - ரூ.1,055)

* எழும்பூர் - தாம்பரம் (சேர்கார் - ரூ.380) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.705)


* நாகர்கோவில் - எழும்பூர் (சேர்கார் - ரூ.1735) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.3220)

* நாகர்கோவில் - தாம்பரம் (சேர்கார் - ரூ.1700) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.3175)

* நாகர்கோவில் - விழுப்புரம் (சேர்கார் - ரூ.1510) - (எக்சிகியூட்டிவ் சேர்கார்- ரூ.2775)

* நாகர்கோவில் - திருச்சி (சேர்கார் - ரூ.1000) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1945)

* நாகர்கோவில் - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.850) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1635)

* நாகர்கோவில் - மதுரை (சேர்கார் - ரூ.1735) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1405)

* நாகர்கோவில் - கோவில்பட்டி (சேர்கார் - ரூ.515) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.985)

* நாகர்கோவில் - நெல்லை (சேர்கார் - ரூ.440) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.830)


இந்த கட்டணமானது உணவுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு இல்லாமல் டிக்கெட் கட்டணமானது, சேர்கார் கட்டணத்திற்கு ரூ.310 குறையும். எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணத்தில் இருந்து ரூ.440 குறையும்.


புறப்படும் நேரம்: 


சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும். தாம்பரத்திற்கு 5.23 மணிக்கு வரும் இந்த ரயில் 2 நிமிடங்கள் நின்றுவிட்டு, 5.25 மணிக்கு அங்கிருந்து புறப்படும். விழுப்புரத்திற்கு 6.52க்கு வந்து சேரும். பின்னர் 6.55க்கு அங்கிருந்து புறப்படும். திருச்சி (வந்து செரும் நேரம் - 8.55 / புறப்படும் நேரம் - 9.00), திண்டுக்கல் (9.53 / 9.55), மதுரை (10.38 / 10.40), கோவில்பட்டி (11.35 / 11.37), நெல்லை (12.30 / 12.32) வழியாக நாகர்கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு செல்லும்.


நாகர்கோவிலில் எப்போது புறப்படும்?


இதேபோன்று மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு (3.18 / 3.20), கோவில்பட்டி (3.58 / 4.00), மதுரை (5.03 / 5.05), திண்டுக்கல் (5.48 / 5.50), திருச்சி (6.45 / 6.50), விழுப்புரம் (8.53 / 8.55), தாம்பரம் (10.28 / 10.30) வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்து சேரும்.


மதுரை - பெங்களூர்  வந்தே பாரத் ரயில்


மதுரையிலிருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் ( வண்டி எண்; 20671), திண்டுக்கல்லுக்கு காலை 5.59 மணிக்கும், திருச்சிக்கு 6.50 மணிக்கும், கரூருக்கு 8.08 மணிக்கும், நாமக்கல்லுக்கு 8.32 மணிக்கும், சேலத்திற்கு 9.15 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு மதியம் 12.50 மணிக்கும், 1 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்து சேரும்.


மறுமார்க்கத்தில், பெங்களூர் கண்டோன்மெண்டில் இருந்த பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20672) கிருஷ்ணராஜபுரத்திற்கு 1.35 மணிக்கு வந்து சேரும். சேலத்திற்கு மாலை 4.50 மணிக்கும், நாமக்கல்லுக்கு 5.38 மணிக்கும், கரூருக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு இரவு 7.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 8.28 மணிக்கும், மதுரைக்கு 9.45 மணிக்கும் வந்தடையும்.


இந்த வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகள் கொண்டது ஆகும். செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருச்சி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் 5 நிமிடங்கள் நின்று செல்லும். இதர ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும்.


கட்டணம் எவ்வளவு?:

* பெங்களூர் - மதுரை (சேர்கார் கட்டணம் - ரூ.1,740) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ.3,060)

* பெங்களூர் - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.1,645) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,870)

* பெங்களூர் - திருச்சி (சேர்கார் - ரூ.1,250) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,270)


* பெங்களூர் - கரூர் (சேர்கார் - ரூ.1,130) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,020)

* பெங்களூர் - நாமக்கல் (சேர்கார் - ரூ.1,085) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,925)

* பெங்களூர் - சேலம் (சேர்கார் - ரூ.1,000) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,750)

* மதுரை - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.440) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.825)

* மதுரை - திருச்சி (சேர்கார் - ரூ.555) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,075)

* மதுரை - கரூர் (சேர்கார் - ரூ.795) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,480)

* மதுரை - நாமக்கல் (சேர்கார் - ரூ.845) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,575)

* மதுரை - சேலம் (சேர்கார் - ரூ.935) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,760)

* மதுரை - கே ஆர் புரம் (சேர்கார் - ரூ.1,555) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ2,835)

* மதுரை - பெங்களூர் (சேர்கார் - ரூ.1,575) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ. 2,865).


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement