சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
புறநகர் ரயில்
தலைநகர் சென்னையில் போக்குவரத்துக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தாலும் புறநகர் ரயில் சேவையின் தேவை, மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தினசரி தேவைக்காக புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
2ம் கட்ட மெட்ரோ ரயில்
நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில் மெட்ரோ ரயில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. இந் நிலையில் விரைவில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்காக மொத்தம் 62 ரயில்கள் தயாரிக்கும் பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் மும்முரமாக நடந்து வருகிறது.
ஆளில்லா ரயில்
அதன் அடுத்த கட்டமாக, 3 பெட்டிகளுடன் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் அடுத்த மாதம் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் 2ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயங்கும் வகையில் 3 பெட்டிகளுடன் கூடிய முதல் ரயில் தயாராகி உள்ளது.
1000 பேர் பயணிக்கலாம்
பூந்தமல்லியில் உள்ள பணிமனைக்கு அடுத்த மாதம் இந்த ரயில் கொண்டுவரப்பபட உள்ளது. பின்னர், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த ரயில் பெட்டிகள் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டவை. மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 1000 பேர் வரை தாராளமாக பயணம் செய்யலாம்.இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments