கார்ப்பரேட்களை விட நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும், இதனால், நிறுவனங்களை விட தனி நபர்கள் அதிக வரி செலுத்துவதாகவும், காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறயுள்ளதாவது: ஜூலை1ம் தேதி வரை, 3.61 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி வசூல் ஆனது. ஆனால், கார்ப்பரேட் வரி 2.65 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகி உள்ளது. இது நிறுவனங்களை விட தனி நபர்கள் அதிக வரி செலுத்துவது எடுத்துக்காட்டுகிறது.
மன்மோகன் சிங் பதவி விலகும் போது, மொத்த வரி வசூலில் தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி 21 சதவீதமாகவும், கார்ப்பரேட் வரி 35 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், கார்ப்பரேட் வரி இன்று 26 சதவீதமாக சரிந்துள்ளது. ஆனால் தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி 28 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
2019 ல் தனியார் முதலீடு அதிகரிக்கும் எனக்கூறி கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. மாறாக மன்மோகன் ஆட்சியில் 35 சதவீதமாக இருந்த தனியார் முதலீடு, 2014-24 ல் 29 சதவீதமாக குறைந்து விட்டது. அதிக வரியை தனி நபர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன், மூலம் ரூ.2 லட்சம் கோடி கோடீஸ்வரர்களின் பைகளுக்கு சென்றுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
0 Comments