அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை சுட்டவர் யார் என தெரிந்தாலும் தற்போது முதல்முதலாக அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது .
தேர்தல் பிரசாரத்தில் ஜூலை 13ல் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. துப்பாக்கியால் சுட்ட நபர் பெயர் மற்றும் தாமஸ் மாத்யூ குரூக்ஸ் (20) என தெரியவந்தது. பெனிசில்வேனியாவில் உள்ள பெத்தேல்பார்க்கை சேர்ந்த இவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இவர் டிரம்ப்பை சுட்டதன் காரணம் குறித்து போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டில் எப்.பி.ஐ.., படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவரது வீட்டில் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
0 Comments