நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழகத்தில் ஒன்று அல்லது 2 இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகின. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சமூக வலைதளங்களில் வெற்றி கொண்டாட்டங்களை பதிவு செய்தார்கள். அப்போது, கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியின் உரை வைரலானது.
'உங்கள் (பா.ஜனதா) வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது, அது உங்களால் முடியவே முடியாது' என்ற ராகுல்காந்தியின் உரை வைரலானது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளது.
Click Here to Download - RahulGandhi Speech About people of Tamil Nadu - Video
0 Comments