Ad Code

Responsive Advertisement

தக்காளி விலை அதிரடி உயர்வு - மக்கள் அதிர்ச்சி

 




கர்நாடகா,  ஆந்திராவிலிருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால்,  தக்காளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. 


கடந்த சில நாட்களாகவே அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.  குறிப்பாக தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.  ஒரு கிலோ ரூ.80க்கு விற்கப்படும் நிலையில்,  சில்லறை விற்பனையில் ஏற்கனவே விலை ரூ.90ஐ நெருங்கிவிட்டது.  விரைவில் ரூ.100ஐ தொடும் எனவும் அஞ்சப்படுகிறது.


விலை உயர்வால் மக்கள் தேவையை குறைத்து கொண்டு காய்கறிகளை வாங்குவதாகவும், இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்துள்ளதாவது;


தக்காளி மட்டுமின்றி காய்கறிகள் விலை அதிகரிக்க,  மழை தான் முக்கிய காரணம்.  4 கிலோ ரூ.100-க்கு விற்பனையான நிலையில்,  தற்போது ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.  முதல் தர தக்காளி 80 ரூபாய் முதல்,  சிறிய தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


அரை கிலோ தக்காளி வாங்கிய மக்கள் கால் கிலோ,  அல்லது கிராம் கணக்கில் வாங்குகிறார்கள்.  கோயம்பேடு சந்தைக்கு வந்த வாகனங்களில்,  பாதிக்கு பாதி குறைந்துவிட்டது.  மழை காலங்களில் செடிகள் பாதிப்பதால் வரத்து குறைகிறது. கர்நாடகா,  ஆந்திரா பகுதிகளில் மழை காலம் முடியும்வரை விலை நீடிக்கும். ரூ.10 முதல் 20 வரை விலை குறைய வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement