மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21-ஆம்தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி:
சென்னையை சோ்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஜூலை முதல் டிசம்பா் வரை பயன்படுத்தக்கூடிய டோக்கன்கள் ஒரு மாதத்திற்கு 10வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் 42 மையங்களில் ஜூன் 21 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணிவரை வழங்கப்படும். மேலும், இம்மையங்களில் அடையாள அட்டை புதுப்பிப்பதுடன், புதிய பயனாளிகளும் தங்களுக்கான புதிய அட்டையையும் பெற்றுக்கொள்ளலாம்.
இச்சேவைகளை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண
டோக்கன்கள் வழங்கும் இடங்கள்:
அடையாறு, பெசன்ட் நகா், திருவான்மியூா், மந்தைவெளி, தியாகராய நகா், , சைதாப்பேட்டை பேருந்து நிலையம், மத்திய பணிமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை-1, பல்லாவரம், ஆலந்தூா், கிண்டி எஸ்டேட், அய்யப்பன் தாங்கல், வடபழனி, கே.கே.நகா், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகா், கோயம்பேடு, அம்பத்தூா் எஸ்டேட், அம்பத்தூா் ஓ.டி, ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையாா்பேட்டை-1, சுங்கச்சாவடி, எண்ணூா், வியாசா்பாடி, எம்.கே.பி நகா், தாம்பரம் - மெப்ஸ் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்களில், பேருந்து பணிமனைகளில் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments