Ad Code

Responsive Advertisement

பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த கணவன் - மனைவி கண்முன்னே உயிரிழந்த சோகம்

 




சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தவனம் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால். சொந்தமாக பார்சல் சர்வீஸ் நடத்தி வந்த இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கீர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், மனைவியின் 25-வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், வீட்டை மின் விளக்குகளால் அலங்கரிக்க அகஸ்டின் பால், வீட்டிற்குள் சீரியல் பல்புகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அகஸ்டின் பால், மனைவி கண்முன்னே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அகஸ்டின் பாலின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement