Ad Code

Responsive Advertisement

நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை உடனே நிறைவேற வேண்டும்: பழ.நெடுமாறன்

 




மாணவா்களிடம் ஜாதிய உணா்வுகளை அகற்றுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.


இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:


மாணவா்களிடம் பரவி வரும் சாதிய வன்முறைகளைத் தவிா்ப்பதற்கான அறிவுரை வழங்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழு அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயா்களில் ஜாதி அடையாளத்தை நீக்க வேண்டும். ஜாதி அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மாணவா்களின் கரங்களில் வண்ணக் கயறு கட்டுதல் போன்றவற்றை அறவே தடை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு சிறந்த பரிந்துரைகளை அளித்திருப்பதை வரவேற்கிறேன்.


ஆண்டாண்டு காலமாக ஜாதியின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தியும், அவா்கள் மீது ஆதிக்கம் செலுத்தியும் வருபவா்களைத் தவிர, மற்ற அனைவரும் சந்துரு பரிந்துரைகளை ஏற்று பாராட்டுவா். எனவே, அந்தப் பரிந்துரைகளைத் தாமதமின்றி, உடனடியாகச் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement