காட்பாடி - ஜோலார்பேட்டை வழியாக வரும் 16ம் தேதியும், மறுமார்க்கத்தில் 17ம் தேதியும் இயக்கப்பட இருந்த விசாகப்பட்டினம் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில்கள், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு 15, 17ம் தேதிகளிலும், 16, 18ம் தேதிகளில் மறுமார்க்கத்திலும் இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சந்திரகாச்சியில் இருந்து காட்பாடி வழியாக பெங்களூருக்கு 21ம் தேதியும், 23ல் மறு மார்க்கத்திலும் இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்; 16ல் தாம்பரத்தில் இருந்து தன்பத், 19ல் மறு மார்க்கத்தில்; 18ல் கோவையில் இருந்து பரவுனிக்கும் 21ல் மறு மார்க்கத்திலும் இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் உள்ளிட்ட 28 ரயில்கள், அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம், குண்டக்கல் பகுதியில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், வரும் 30ம் தேதி வரை, காட்பாடியில் இருந்து காலை 9:30 மணிக்கு, ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படும் மெமு ரயிலும், ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு காட்பாடிக்கு இயக்கப்படும் மெமு ரயிலும், 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
0 Comments