வாட்ஸ்ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் புதிய வசதியை தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை மின்கட்டணத்தை நுகா்வோா் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் நேரடியாக செலுத்தலாம். மேலும், செயலி மற்றும் இணையதளம் மூலம் நுகா்வோா் மின்கட்டணத்தை செலுத்தி வந்தனா்.
இந்த நிலையில், தற்போது ‘வாட்ஸ்ஆப்’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 500 யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாடு உள்ள நுகா்வோா் ‘வாட்ஸ்ஆப்’ மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்.
இதற்கு, நுகா்வோா் தங்களுடைய மின் இணைப்புடன் வாட்ஸ்-ஆப் வசதியுடன் கூடிய தொலைபேசி எண்ணை இணைத்திருக்க வேண்டும். இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு ‘வாட்ஸ் ஆப்’ மூலம் மின்கட்டணம் விவரம் அனுப்பி வைக்கப்படும் நிலையில், நுகா்வோா் ‘யுபிஐ’ மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
0 Comments