Ad Code

Responsive Advertisement

கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்று தெரியுமா?

 




 கடல்கள் பூமியின் மேற்பரப்பில் சுமார் 70 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது. பூமியில் உள்ள அனைத்து நீரிலும் சுமார் 97 சதவீதம் உப்புத்தன்மை கொண்டது. நமது கிரகத்தில் நிறைய உப்பு நீர் உள்ளது. இந்த உப்பு எல்லாம் எங்கிருந்து வந்தது என்று யோசித்துள்ளீர்களா?


இந்த பதிவின் மூலம் கடல் நீர் ஏன் உப்பு தன்மையாக உள்ளது என்று தெரிந்துக்கொள்வோம்.


கடல் நீர் ஏன் உப்பு தன்மையாக இருக்கின்றது?

கடலின் நீளத்தை என்றும் அளவிட முடியாது. நிலத்தில் விழும் மழை நீரானது வளி மண்டலத்தில் உள்ள கார்பன் ஆக்சைடில் சிறிதளவு கலக்கும். அதனால் மழை நீரானது கார்பானிக் அமில தன்மையை அடையும். அது பாறைகளின் மீது கடக்கும் போது கரைந்து செல்லும்.


இதன்போது வேதியியல் மாற்றத்தின் காரணமாக மின்னூட்டம் அணுத்துகளாக உருவாகி, அது அயனிகளாக மாறும்.


அது மழை நீருடன் வெள்ளத்தின் போது கடலில் கலக்கும். 90% சதவீதம் சோடியம் மற்றும் குளோரைடு இந்த அயனிகளில் அதிகமாக காணப்படுகிறது. ஆகவே அது உப்பு தன்மையாக கொண்டுள்ளது.


இந்த அயனிகள் கடலில் தங்கியிருப்பதால் தான் கடல் நீர் உப்பாக மாறியுள்ளது. இவ்வாறு இருக்கையில் கடலில் உள்ள நீர் ஆவியாகும். ஆனாலும் அதில் உள்ள உப்பு கடலில் தான் இருக்கும். ஆகவே தான் கடல் நீர் உப்பாக இருக்கின்றது.   


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement