தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 31) 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இதனால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை( ஏப்.1,2) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதன்கிழமை( ஏப்.3) தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வியாழன் முதல் சனிக்கிழமை) ஏப்.4-6) வரை வட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
9 இடங்களில் வெயில் சதம்:
தமிழகத்தில் சனிக்கிழமை பதிவான வெப்ப அளவு(டிகிரிபாரன்ஹீட்):
ஈரோடு, பரமத்திவேலூா்-104,
சேலம், திருச்சி-102.38,
மதுரை நகரம்-102.2,
மதுரை விமானநிலையம்-102.02,
வேலூா்-100.94,
தருமபுரி-100.4,
திருத்தணி-100.04.
0 Comments