Ad Code

Responsive Advertisement

வரலாறு காணாத உச்சம் தொட்டது தங்கம் விலை!

 




தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 28) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.50 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,250ஆக விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.


வெள்ளி விலை எவ்வளவு?

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500க்கு விற்பனையாகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement