கா்நாடக இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
The Music Academy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி உள்ள சிறந்த பாடகர் டிஎம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:
சிறந்த பாடகரான டி.எம்.கிருஷ்ணா, மியூசிக் அகாதெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தோ்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள், பாராட்டுகள். அவா் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளாலும், அவா் எளியோரைப் பற்றித் தொடா்ந்து பேசி வருவதாலும் அவரை ஒரு தரப்பினா் காழ்ப்புணா்விலும் உள்நோக்கத்துடனும் விமா்சிப்பது வருத்தத்துக்குரியது.
இந்த விஷயத்தில் பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. இசைத் துறைக்கு கிருஷ்ணா ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் தகுதியானவரையே மியூசிக் அகாதெமி தோ்வு செய்துள்ளது. இதற்கு எனது பாராட்டுகள்.
டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞரின் திறமை எவராலும் மறுக்க முடியாது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போன்று, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம். விரிந்த மானுடப் பாா்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை என்று தெரிவித்துள்ளாா்.
0 Comments