பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பது குற்றம் என்று அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.
எனினும், சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், பொதுமக்களிடம் இருந்து, 10 ரூபாய் நாணயத்தை பெட்ரோல் பங்க்குகள், கடைகள், வங்கிகள் போன்றவற்றில் வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இது தொடர்பாக, உணவு மற்றும் கூட்டுறவு துறைக்கு புகார்கள் சென்றன.
அதனால், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'பொது மக்களிடம் இருந்து, 10 ரூபாய் நாணயம் பெற்றுக்கொள்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதுடன், உள்ளூர் அளவில் செய்தி வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments