Ad Code

Responsive Advertisement

நீங்கள் வாங்குகிற தேன் தரமானதா? கண்டுபிடிக்க எளிய வழிகள்!

 



தேன், உணவுப்பொருள் மட்டுமல்ல. மகத்தான மருந்துப் பொருளும் கூட.  தேன் என்றால் நாக்கில் வைத்தால் இனிக்கும் என்பதை மட்டுமே அறியும் சமுதாயமாக இன்றைய சமுதாயம் உள்ளது. அதிலும் நவீன குழந்தைகள், பால் எங்கிருந்து வரும் என்றால் பாக்கெட்டிலிருந்து வரும், என்பதைப்போல தேன் எங்கிருந்து கிடைக்கும் என்றால் கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு கடைகளில் இருந்து கிடைக்கும் என்னும் நிலையே உள்ளது.  


தேன் நமது ரத்தத்தின் மூலக்கூறுகளைப் போன்ற அமைப்பினைக் கொண்டது. அதன் வேதியியல் அமைப்புகள் மனிதனுக்கு மிக நெருக்கமாக அமையப்பெற்றுள்ளன. அதனால் உடலில்  ஜீரண சக்தி குறைந்தவர்கள்கூட இதனை உட்கொள்ளலாம்.


தேனில் மூன்று வகைகள் உள்ளன:


முதலாவது கொம்புத் தேன். பாறைகள், மரங்களில், அதாவது வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூடு கட்டக்கூடியது இந்தத்

தேனீ வகை. அதிலிருந்து குடம்குடமாக தேன் கிடைக்கும். இதற்கு மருத்துவ மதிப்பு குறைவு. 


இரண்டாவது பொந்துத் தேன். குகை, மரப்பொந்து போன்ற இருட்டான இடங்களில் கூடு கட்டும் தேனீ வகை இது. இதைத்தான் பெட்டிகளில் வளர்க்கிறார்கள். இந்தத் தேன் வகை மிதமான அளவு கிடைக்கும். மருத்துவ மதிப்பும் மிதமான அளவு உண்டு. 


மூன்றாவதாகக் கொசுத் தேன் என்ற சிறிய தேனீ வகை உண்டு. இந்தத் தேன் கிடைப்பது கஷ்டம். ஆனால், இதில்தான் மருத்துவ மதிப்பு அதிகம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement