Ad Code

Responsive Advertisement

பல மாவட்ட ஆட்சியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

 



12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர்.பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும், திருப்பத்தூர் ஆட்சியராக தர்பகராஜூம் நியமிக்கப்பட்டுள்ளனர். 


தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சேலம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர்: 

சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது சேலம் மாவட்ட ஆட்சியராக உள்ள கார்மேகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தோட்டக்கலைத் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெண் ஆட்சியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement