Ad Code

Responsive Advertisement

அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிமாக ஒத்திவைப்பு

 



போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததால் நேற்று முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. 


இதில் சில விபத்துகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து பேருந்துகள் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயர்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தொடர்ந்து வர இருக்கும் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவது முரண் அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது.


இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 


இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பண்டிகை நாட்களில் மக்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்பதை கருத்தில் கொண்டு தற்போது போராட்டத்தை வாபஸ் வாங்குகிறோம். மேலும் இந்த போராட்டம் ஜனவரி 19ம் தேதி தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement