சென்னையில் நடக்கும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும்.
இன்று பல முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதில், சென்னையில் நடக்கும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.
இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது. இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை இட்டுள்ளது. இவ்வகையான நிபந்தனை உலகிலேயே முதன்முறை என தொழிற்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதாவது கோத்ரெஜ் நிறுவனத்தின் சிந்த்தால் சோப் ஆலையில் 5% மாற்றுப் பாலினத்தாருக்கு வேலை அளிக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறியுள்ளது. செங்கல்பட்டில் சிந்த்தால் சோப் உற்பத்தி ஆலையை கோத்ரெஜ் தொடங்க உள்ளது; செங்கல்பட்டு ஆலையில் 50% பெண்கள், 5% மாற்றுப் பாலின பணியாளர்கள் இருப்பார்கள்.
சுதேசி இயக்கத்தின் வெளிப்பாடாக தோன்றியது கோத்ரேஜ் நிறுவனம்; இந்தியாவின் பிரீமியம் சோப் விற்பனையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா முதலீட்டாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
0 Comments