மகாத்மா காந்தி நினைவு நாளான, ஜன.30ம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க., சார்பில் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நடைபெறும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காந்தி குறித்த கவர்னரின் கருத்துக்கும் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காந்தியை இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர். காந்தி குறித்து கவர்னர் சொல்லி இருப்பதும் வன்மம் கலந்த நோக்கம்தான்.காந்தி மறைந்து
75 ஆண்டுகள் பின்னரும் அவர் மீதான கோபம் வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை.
வரும் 30 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை திமுக கட்சியினர் நடத்த வேண்டும். உறுதிமொழியேற்பு விழாவில் அனைத்து மதங்களை சார்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச்செய்ய வேண்டும். ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments