பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியரின் அலைபேசியில் இருந்து 76 ஆபாச வீடியோ மற்றும் 100 போட்டோக்களை சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதை தொடர்ந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் கோட்டாறு வடலி விளையைச் சேர்ந்தவர் சுந்தர் சிங் 32. திருமணமானவர். கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவிக்கு ஆசை வார்த்தைகள் கூறி அலைபேசி வாங்கி கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் சுந்தர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. மாணவிகளை விளையாட்டு துறையில் உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி பெற்றோர்களிடம் பேசியுள்ளார். இதைக்கூறி சில மாணவிகளின் தாயாரையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பல ஆசிரியைகளும் சுந்தர்சிங்குடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
இவர் கைது செய்யப்பட்டதும் இவருடன் தொடர்பில் இருந்த பல ஆசிரியைகள் தங்கள் அலைபேசியில் இருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அழித்து விட்டனர். ஆனால் போலீசார் சுந்தர் சிங்கின் அலைபேசியில் ஆய்வு செய்தபோது மாணவிகள், அவர்களின் தாயார் நிர்வாணமாக சுந்தர்சிங்கிடம் பேசியது இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். அலைபேசியை கைப்பற்றிய போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்கனவே அழிக்கப்பட்ட படங்களையும் மீட்டுள்ளனர்.
இவர் 10 பள்ளிகளில் பணியாற்றி உள்ளதாகவும் ஒவ்வொரு பள்ளியிலும் பாலியல் பிரச்னை வந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். சுந்தர் சிங்கின் அலைபேசி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியை, மாணவிகளின் ஆபாச படங்களை கைப்பற்றியுள்ள போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
0 Comments