சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டது.
இதனை தொடர்ந்த அவரது வீட்டிற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நடிகர் விஷ்ணு விஷாலையும், அவரது வீட்டில் தங்கியிருந்த பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கானையும் மீட்டனர். இந்த தகவலை நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தான் வெள்ளத்தால் சிக்கி தவிப்பதாக பதிவிட்ட சில மணி நேரத்தில் மீட்ட தீயணைப்புத்துறையினருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அமீர்கானின் தாயார் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு நடிகர் அமீர்கான் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை படகு மூலம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் மீட்டனர். தன் தாயாரை மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக சில மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு அமீர் கான் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments