சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின்உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவரின் இறுதி சடங்கில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று அரசு மரியாதை செலுத்தியுள்ளார்.
அப்போது, தமிழகத்தில் தற்போது வரை உறுப்பு மாற்று சிகிச்சைக்காக, 7,010 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவித்து உள்ளார்.
'மூளைச்சாவு ஏற்பட்டு, அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவோரின் இறுதி சடங்கு, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்' என்று அரசு அறிவித்தது முதல் தற்போது வரை, 3,315 பேர் உறுப்பு தானம் அளிக்க பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுவே, மிகப்பெரியவிழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கான சான்று.
உறுப்பு தான மாற்று சிகிச்சை குறித்த விபரங்களுக்காகவே வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில், 'இந்தியாவில், நான்கு ஆண்களுக்கு உறுப்பு தான சிகிச்சை நடைபெறும் போது, உறுப்பு தானம் பெறும் பெண் நோயாளி எண்ணிக்கை ஒன்று மட்டுமே' என்று கூறியுள்ளது வியப்பாக உள்ளது.
மேலும், உயிரோடு வாழும் போதே, உறுப்பு தானம் தருவதில் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அவர்களின் பங்கு, 93 சதவீதம் என்பது, எந்தளவுக்கு அவர்கள் மனிதநேய கொடை வள்ளல்களாக திகழ்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.
ஒவ்வொரு குடும்பத்திலும், ஆண் உறுப்பினர்களுக்கு, ஏதோவொரு உடல் உறுப்பு தானம் தேவைப்படும் போது, மற்றவர்களை எதிர்பார்க்காமல், துணிச்சலாக அவர்களுக்கு உடல் உறுப்பு தானம் கொடுப்பதில், பெண்களே அதிகளவில் முன்வருகின்றனர். 'திராவிட மாடல்' ஆட்சியில், தமிழக அரசு செய்த நல்ல திட்டங்களில் ஒன்றாக இந்த அரசாணை திகழும்.
மேலும், நம் தமிழக அரசை பின்பற்றி, மற்ற மாநிலங்களும் இந்த அரசாணையை வெளியிட்டு பின்பற்ற துவங்கியிருப்பது, விரைவில் நம் நாடு உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நாடுகளின், முதல், 10 இடங்களுக்குள்வந்து விடும். அதற்கு வழிவகுத்த சிறுவன் ஹிதேந்திரனின் பெற்றோர் மற்றும் தமிழக அரசுக்கு அனைவரும் ராயல் சல்யூட் அடிக்கலாம்.
0 Comments