சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.5975-க்கும், சவரனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ. 47,800-க்கும் விற்பனையானது. இந்த விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக அமைந்தது. குறிப்பாக, கடந்த 6 நாள்களில் சவரனுக்கு ரூ. 1,500 அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.5) சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ரூ. 2.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 81.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.81,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி வீதத்தை இனி உயா்த்த வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு சா்வதே அளவில் சரியத் தொடங்கியுள்ளது. மதிப்பேற்றம் அடிப்படையில் தற்போதைக்கு தங்கம் மட்டுமே சிறந்த முதலீடாகக் கருதப்படுவதால் அதை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தங்கம் இருந்தால் தைரியமாக தொழில் தொடங்கலாம், வீடு கட்டலாம்; வங்கிகளில் தங்கத்தின் மீதான கடன் வட்டி குறைவு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் தங்கத்தை சிறந்த முதலீடாகக் கருதுகின்றனா். இதனால்தான் அதன் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
0 Comments