முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சபாரி கார் விற்பனைக்கு வந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டாடா சபாரி காரை, 1999ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரை பயன்படுத்தி வந்தார். பிறகு 2007 ல் பாரதி என்ற நண்பருக்கு அந்த காரை கொடுத்துவிட்டார். இவர், சில ஆண்டுகள் கழித்து வேறு ஒருவருக்கு அந்த காரை விற்றுவிட்டார்.
இப்படியே சிலரின் கைகளுக்கு கைமாறிய இந்த கார் தற்போது நிஜந்தன் ஏழுமலை என்பவரிடம் உள்ளது. தற்போது அந்த காரை விற்பனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார். அதன் விலை ரூ.2.72 லட்சம் என கூறப்படுகிறது. இந்த காரை வாங்க அ.தி.மு.க.,வினர் ஆர்வமாக உள்ளனர்.
0 Comments