தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் நிலையில், அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன், வெளியிட்டுள்ள வீடியோவை, அக்கட்சியினர் பரப்பி வருகின்றனர்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் என, இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜயபிரபாகரன், கட்சி பணியில் ஈடுபடும் நிலையில், இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்பாக வெளியாகும் செய்திகள், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. விஜயகாந்த் உடல்நலம் குறித்து, அவரது மனைவி பிரேமலதா வீடியோ வாயிலாக பேசி வருகிறார்.
இந்நிலையில், விஜயபிரபாகரன் தன் சமூகவலைதள பக்கத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் வரும் காட்சி இடம் பெற்று உள்ளது. சிறுவன் ஒருவன் விஜயகாந்தை பார்த்து, 'உன்னால் முடியும்; அப்பாவால் முடியும்' என்று கூறுகிறார். இதையடுத்து, விஜயகாந்த் வீறுகொண்டு எழுகிறார்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில், தே.மு.தி.க., தொண்டர்கள் அதிகம் பரப்பி வருகின்றனர். விஜயகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும், விஜயபிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 Comments