பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயல் தொடர்பாக சென்னை எழிலகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மீனவர்களுக்கு பொதுமக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. புயல் காரணமாக அதிக காற்றுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் மீட்பு படையினர் உள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு அர்பணிப்புடன் பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மக்களை காக்க வேண்டிய நேரத்தில் அரசியல் பேச வேண்டாம். பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் புயல் முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பபட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments