Ad Code

Responsive Advertisement

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் காலமானார்

 



தே.மு.தி.க., தலைவர் விஜயகாந் இன்று (டிச.28) காலை காலமானார். முன்னதாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்படுட்டது.


தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தற்போது அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சென்னையில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்.


‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். 




இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார். 


விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர். 


விஜயகாந்த் இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 




இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள குறிப்பிடப்படும் பிரபலங்களில் இவரும் ஒருவராவார். 


இவருக்கு தமிழ் சினிமாவில் "புரட்சி கலைஞர்' என்னும் பட்டம் உண்டு.


விஜயகாந்த், மதுரையில் கே.என் அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமி ஆகியோருக்கு மகனாக 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் பிறந்துள்ளார். 


நடிப்பு கலையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், சினிமாவில் நடிகன் ஆக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்து பல



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement