குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமபங்கு கொடுத்து வரலாற்று சாதனை செய்த கலைஞர்🖤🩷!!*
1929ல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் பெண்களுக்கு சொத்தில் பங்கு வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்து தொடர் பிரச்சாரம் செய்தார்!
1951-ல் அண்ணல் அம்பேத்கர் இந்தியா முழுவதும் பெண்களுக்கு சொத்து கொடுத்து இந்து சட்டத்தில் திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தபோது சனாதனிகள் ஏற்று கொள்ள மறுத்ததால் தன் சட்ட அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார் அண்ணல்!
இந்தியாவிலேயே முதன் முதலாக பெண்களுக்கு சொத்தில் உரிமை கொடுக்கும் சட்டம் 1989ல் தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால் இயற்றப்பட்டது!
நீண்ட நெடிய சமூக,சட்ட போராட்டங்களுக்கு பிறகு
ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு தரவேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்த வரலாற்று நாள் *(29.12.1990)இன்று!
0 Comments