தீபாவளி சிறப்புப் பேருந்துகள் எந்தெந்த இடத்தில் இருந்து இயக்கப்படும் என்ற விவரம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் 9, 10, 11ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கக்கூடிய 2,100 அரசுப் பேருந்துகளுடன் நாளை முதல் (நவ. 9), 10, 11 ஆகிய 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
சென்னையில் இருந்து கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
மாதவரம் : சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கே.கே.நகர் : சென்னை கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்) பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆா் வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் மெப்ஸ் : தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையம் : தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பூந்தமல்லி : பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊா்களைத் தவிர, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
0 Comments