Ad Code

Responsive Advertisement

மாரடைப்பு - இந்த 5 அறிகுறிகள் - ஜாக்கிரதையா இருக்கணும்

 



நம்முடைய உடலுக்குள் இருக்கும் பிரச்சிகைளை சில அறிகுறிகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். அதிலும் இதய நோய்கள் பற்றி நம் உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை கவனமாக புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு இரவு நேரத்தில் சில அறிகுறிகள்


இதய நோய் உள்ளவர்களுக்கு இரவு நேரத்தில் மட்டும் உடல் சில அறிகறிகளை வெளிப்படுத்தும். அவற்றில் சில அறிகுறிகளை நாம் வேறாகப் புரிந்து கொள்கிறோம். . அந்த அறிகுறிகளை சரியாகப் புரிந்து கொண்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.


நம்முடைய இதயம் பகல், இரவு என எல்லா நேரங்களிலும் வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதனால் இதயம் சரியாக வேலை செய்தால் தான் நம்முடைய ஒட்டுமொத்த உடல் இயக்கம் சீராக இருக்கும். அதற்கு இதயத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஆக்சிஜனையும் ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


​இரவில் ஏற்படும் இதய நோய் அறிகுறிகள்

இரவு நேரத்தில் நாம் தூங்கும்போது நம்முடைய உடல் சில சமிக்ஞைகளை வெளிப்படுத்தும்.


இரவு தூங்கும்போது, நாம் ஓய்வாக இருக்கும்போது, இதயம் சரியாகச் செயல்படாதபோது அல்லது தளர்வடையும் போது சில அறிகுறிகள் வெளிப்படும். தூக்கத்தில் இருந்தாலும் அவை நம் இயக்கத்தை தடை செய்யும். அந்த நுட்பமான அறிகுறிகளை சரியான நேரத்தில் புரிந்து கொண்டால் இதய நோய் ஆபத்தை தவிர்க்கலாம்.


​இதயம் பழுதானால் என்ன நடக்கும்?


நம்முடைய ஒட்டுமொத்த உடலுக்கும் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ரத்தத்தையும் ஆக்சிஜயும் பம்ப் செய்து அனுப்பும் வேலையை இதயம் செய்கிறது.


உடல் உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது இதயத்தில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உடலிலுமே நிறைய குழப்பங்களையும் ஏற்படுத்தும்.


இப்படி குழப்பம் வரும்போது தான் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய்களுக்குக் காரணமாகும்.


​இரவு நேர மூச்சுத் திணறல் 

இதயத்தில் பாதிப்பு இருப்பவர்களுக்கு இரவு நேரத்தில் தூங்கும் போது, மூச்சுத் திணறல் உண்டாகும். சிலர் அது ஆஸ்துமா மற்றும் வீசிங்கால் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொள்கிறோம்.


ஆனால் மூச்சுத்திணறல் தான் இதய பாதிப்பின் முதல் சிக்னல் என்று புரிந்து கொள்ளுங்கள். நாம் படுத்திருக்கும் போது, கிடைமட்டமாக படுத்திருப்போம். இந்த சமயத்தில் உடல் திரவங்கள் உடலில் பரவுதல் அதிகமாகும் போது, நுரையீரலிலும் திரவம் கோர்க்கும். அதன் காரணமாக மூச்சுத்திணறல் அதிகரிக்கும்.


​இரவில் வரும் இருமல்

நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது, இடையில் கடுமையாக இருமல் வந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது இதய பாதிப்பின் அறிகுறிகளில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ங்கள்.


நன்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுந்து இருமுகிறார்கள். குறிப்பாக இருமுவதற்காகவே இடையில் எழுந்து கொள்வார்கள். அப்படி தூக்கததின் இடையே வருவது ஆபத்து தான்.


மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படுவதற்கு முன் இந்த அறிகுறி தோன்றலாம்.


​இரவில் வியர்த்தல்

சிலருக்கு இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். இதயத் துடிப்பில் சீரற்ற தன்மை இருப்பதைக் குறிக்கும் முக்கியமான அறிகுறி தான் இரவு நேரத்தில் வரும் அதிகப்படியான வியர்வை.


அதிலும் குறிப்பாக ஃபேன் ஓடிக்கொண்டு இருந்தாலும் கூட குளிர்ச்சியாக அதிகமாக வியர்க்கும்.


​கால்கள், கணுக்கால்களில் வீக்கம் ( Swollen Legs, Ankles, And Feet At Night)

இரவில் கணுக்கால், பாதங்கள் மற்றும் கால்கள் வீங்குவது இதய செயல்பாட்டில் இருக்கும் பிரச்சினைகளைக் குறிக்கும் முக்கியமான அறிகுறி.


படுத்திருக்கும் போது, புவியின் ஈர்ப்பு விசையால் உடலின் ஒட்டுமொத்த திரவங்களும் கால்களை நோக்கி நகரும். இதனால் இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதோடு நீர் முழுக்க கீழ்நோக்கி தேங்குவதால் கால்கள் மற்றும் கணுக்காலில் வீக்கம் உண்டாகும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement