Ad Code

Responsive Advertisement

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

 



அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழக கடற்கரைப் பகுதியிலும், அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் குமரிக்கடல் பகுதியிலும் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது தமிழக கடலோரத்தையொட்டி நீடிக்கிறது.


இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement