Ad Code

Responsive Advertisement

குறிவைக்கப்படும் WhatsApp பயனர்கள் - இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் - உஷார்!

 



வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாக, புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


முன்பெல்லாம் இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளின் குறியீடுகளை கொண்ட தொலைபேசி எண்களை பயன்படுத்தி மோசடி நடைபெற்ற நிலை மாறி, தற்போது அது அமெரிக்காவை மையம் கொண்டுள்ளது.


அமெரிக்க நிறுவனத்திடமிருந்து அழைப்பு வருகிறது என்று பயனர் எண்ணும் வகையில் செய்திகளும் அழைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்படியெனில் மோசடி செய்பவர்கள் முக்கிய அமெரிக்க நிறுவனங்களுக்குள் செல்வாக்கு மிக்க நபர்களை போல் நடிக்கிறார்கள். இதற்கு சில முக்கிய அமெரிக்க மாநிலங்களின் குறியீடுகளை குறிக்கும் வகையில் போலி தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர்.


குறிப்பாக, அமெரிக்காவின் ஜார்ஜியா மற்றும் அட்லாண்டா மாகாணங்களுக்கான +1 (404) மற்றும் சிகாகோவிற்கான +1 (773) போன்ற தொலைபேசி எண்களில் இருந்து தொடங்கும் அழைப்புகள் மோசடியானதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான அளவிற்கு வாட்ஸ்அப்பில் குறிவைக்கப்பட்டு உள்ளனர். மோசடி அழைப்புகள் என சந்தேகித்து பாதிக்கப்பட்டவர் போனை எடுக்காவிட்டாலும், "இதைப் பார்க்கும்போது எனக்குப் பதில் சொல்லுங்கள். நன்றி" போன்ற செய்திகள் அடங்கிய குறுஞ்செய்திகளை அனுப்பி நம்மை ஏமாற தூண்டில் போடுவார்கள்.


எனவே எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் வெளியிடுவதற்கு முன்பு பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சைபர் கிரைம் காவல்துறை அறிவுறுத்துகிறது. மோசடி அழைப்புகள் குறித்து புகார் அளியுங்கள். பொது வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் போது, ​​குறிப்பாக முக்கியமான பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement