நாம் வீடு கட்டும்போது செங்கற்களை அடுக்கி, இணைப்பு பொருளாக சிமெண்ட் கலவையை [ சிமெண்ட் + மணல் + நீர் ] பயன்படுத்துகிறோம்.
சிமெண்டும் நீரும் கலக்கும் போதுதான் வேதிவினை ஏற்பட்டு, சிமெண்ட் உறுதித்தன்மையை அடையும். வெறும் சிமெண்ட் தனியாக இருந்தால் எந்த பயனும் இல்லை.
செங்கல் சூளையில் செங்கல் தயாரிக்கும் போது அதிக தீயிட்டு சுட்டு தயாரிக்கிறார்கள். இதனால்,செங்கற்கள் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.
எனவே வீடு கட்டும்போது செங்கற்களை நீரில் நனைக்காமல் கட்டினால் , அது சிமெண்ட் கலவையில் உள்ள நீரை உறிஞ்சிக்கொள்ளும். இதனால் கலவையில் உள்ள நீர் குறையும்.
கலவையில் உள்ள நீர் குறையும் போது சிமெண்டின் வேதிவினை குறைந்து கலவையின் உறுதித்தன்மை குறைந்துவிடும். ஆகவே,செங்கற்களை நீரில் நனைத்து கட்டும் போது, அது கலவையில் உள்ள நீரை உறிஞ்சாது. கலவையும் முழுமையாக வேதிவினை அடைந்து கட்டிடத்தின் உறுதிதன்மையை அதிகமாக்கும்.
0 Comments