பொதுவாக நம் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகளோடு, உணவு முறையும் அவசியம், குறிப்பாக நம்முடைய டயட்டில் புரோட்டீன் உணவுகளும் அவசியம் இருக்க வல்லுநர்கள் கூறுகின்றனர்
அதனால் நாம் உண்ணும் முட்டையில் அதிகளவு புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த முட்டையில் உள்ள புரதங்கள் உங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது . இதனால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைந்து உடல் எடை குறைய வழி செய்கிறது ,மேலும் இது பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.பொதுவாக முட்டையில் உள்ள புரத சத்துக்கள் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது இதன் காரணமாக நாம் கூடுதலாக உணவை உண்டு எடை கூடுவதில்லை
2.இப்படி முட்டை சாப்பிடுவது ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்வதை தடுக்கிறது.
3.பொதுவாக முட்டையில் கலோரிகள் குறைவாக உள்ளது . மேலும் கலோரிகள் குறைந்த மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் ,அடிக்கடி முட்டையை உண்ணலாம்.
4.மேலும் ஒரு முட்டையில் வைட்டமின் பி, செலினியம், பாஸ்பரஸ் உள்ளது .மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்ற மினரல்கள் போன்றவை முட்டையில் உள்ளது . இது எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது.
5.மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முட்டையை தவறாமல் சாப்பிடலாம் .இப்படி எடுத்துக்கொண்டால் உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதுடன், இன்சுலின் அதிகரிப்பை குறைக்கிறது.
6.இப்போது உடல் எடையை குறைக்க உதவும் முட்டை,கீரை ,காளான் ஆம்லேட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் .
7.முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
8.அந்த கலந்த முட்டையுடன் நறுக்கிய வெங்காயம், கீரை மற்றும் காளானை சேர்த்துகொள்ளவேண்டும்.
9.இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
10.இதனை தோசைக்கல்லில் வழக்கமாக ஆம்லேட் செய்வது போலவே செய்து சாப்பிட,நம் பசி குறைந்து எடையும் குறையும்
0 Comments