வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.. அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே வீட்டில் இருந்து செய்ய கூடிய ஒரு அருமையான சுயதொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழிலை ஆண், பெண் இருவரும் செய்யலாம். சரி வாங்க இது என்ன தொழில், எப்படி ஆரம்பிலாம், எது போன்ற பொருட்கள் தேவைப்படும், எவ்வளவு முதலீடு தேவைப்படும் மற்றும் எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை பற்றி அறிவோம்.
என்ன தொழில்?
முன்பெல்லாம் நம் வீட்டில் இருந்த பெரியவர்கள் முளைகட்டிய பயிர்களை சமையலுக்கு பயன்படுத்திப்பார்கள். அதேபோல் திருமணம்., கோவில் திருவிழா இது போன்ற விஷயங்களுக்கு முலை கட்டிய பயிர்களை வளர்ப்பார்கள்.
இந்த முளைகட்டிய பயிரை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கிறது மற்றும் நமது உடலுள் ஆரோக்கியமாக இருக்கும்.
இதனை மக்கள் தற்பொழுது அறிந்துகொண்டு சமைத்து சாப்பிட விரும்புகின்றன. ஆனால் அதனை எப்படி தயார் செய்வது என்று தெரியாதது ஒரு பக்கம் இருந்தாலும், அதனை தயார் செய்வதற்கு நேரம் இருப்பதில்லை இப்பொழுது வீட்டில் உள்ள ஆண், பெண் இருவருமே வேலைக்கு செல்கின்றன.
ஆக மக்களிடம் தற்பொழுது அதிகம் வரவேற்பு இருக்கும் இந்த முளைக்கட்டிய பயிர்களை நாம் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
இடம்:
இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடி செய்யலாம். இதற்காக தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. உங்கள் பிசினஸ் பெரிய அளவில் வளர்ச்சியடையும் போது, தனியாக இடம் அமைத்துக்கொள்வது நல்லது.
மூலப்பொருட்கள்:
முளைக்கட்டுவற்கு பயன்படுத்தும் நவதானியன்களான கோதுமை, நெல், துவரை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள், உளுந்து மற்றும் கொள்ளு இவற்றில் உங்களுக்கு எடுத்து வேண்டுமோ அதனை கொள்ளவும், அதன் பிறகு பேக்கிங் கவர் அவ்வளவு தான் இந்த தொழிலுக்கான மூலப்பொருட்கள் ஆகும்.
முதலீடு:
இந்த தொழிலை தொடங்க 1500 ரூபாய் இருந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே எளிதாக ஆரம்பித்துவிடலாம். அதாவது தானியங்கள் மற்றும் பேக்கிங் கவர் வாங்குவதற்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய்க்குள் தான் செலவுகள் இருக்கும்.
தயாரிக்கும் முறை:
பச்சை பயிரை முளைக்கட்ட போறீங்க அப்படின்னா பாசிப்பயிறு சுத்தமாக கழுவி ஒரு நாள் இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
அதன்பிறகு மறுநாள் கால அவற்றில் உள்ள தண்ணீரை முற்றிலும் வடிகட்டிட வேண்டும்.
பிறகு ஒரு சுத்தமான கார்டன் துணியில் இறுக்கமாக அந்த பாசிப்பயிறு கட்டி வைக்க வேண்டும்.
மறுநாள் அந்த பயிரை பார்க்கும்பொழுது அது முளைக்க ஆரம்பித்திருக்கும். ஓரளவு பயிர்கள் முளைகட்டி வந்ததும் அதன் எடுத்து பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம்.
வருமானம்:
50 கிராம், 100 கிராம் என்று முளைத்த பயிர்களை பேக்கிங் செய்யலாம். 50 கிராம் என்றால் 20 ரூபாய்க்கும், 100 கிராம் என்றால் 40 ரூபக்கிக்கும் விற்பனை செய்யலாம். ஒரு நாளுக்கு 100 கிராம் பாக்கெட் 50. 50 கிராம் பாக்கெட் 50 என்று விற்பனை செய்துவிட்டீர்கள் என்றால் அதன் மூலம் 3000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
சந்தை வாய்ப்பு:
நீங்கள் தயார் செய்த முளைகட்டிய பயிரை சூப்பர் மார்க்கெட், மளிகைக்கடை, காய்கறி கடை போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம் நல்ல அவர்கள் நீங்கள் தயார் செய்ததை நிச்சயம் வாங்கிக்கொள்வார்கள்.
0 Comments