தங்கம் விலை சமீப காலமாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. அதிலும் கடந்த 2 வாரங்களாக தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த 13 நாட்களுக்கு முன்பு 1 பவுன் தங்கம் ரூ.44,400-க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து விலை குறைந்து வருகிறது. கடந்த 24-ந்தேதி தங்கம் பவுன் ரூ.44,168 ஆகவும், 25-ந்தேதி ரூ.44,160 ஆகவும், 26-ந்தேதி ரூ.44,040 ஆகவும், 27-ந்தேதி ரூ.43,840 ஆகவும், 28-ந்தேதி ரூ.43,280 ஆகவும், 29-ந்தேதி ரூ.43,120 ஆகவும், 30-ந்தேதி ரூ.42,880 ஆகவும் குறைந்து கொண்டே வந்தது.
நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து ரூ.42,848-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுன் ரூ.42,320 ஆக குறைந்து விற்பனையானது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.528 குறைந்து உள்ளது. கடந்த 13 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2080 குறைந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5356-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.66 குறைந்து ரூ.5290-க்கு விற்கப்படுகிறது. கடந்த 13 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.260 குறைந்துள்ளது.
இதேபோல் வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.75.50 -க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.73.50-க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 நாட்களில் வெள்ளி கிராமுக்கு ரூ.5.80 குறைந்து உள்ளது. இன்று 1 கிலோ பார் வெள்ளி ரூ.73,500-க்கு விற்பனையானது.
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments