நம்முடைய வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள், கஷ்டங்களுக்கு பித்ருக்களின் சாபமும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். இந்த சாபங்களில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் விடுபடுவதற்கு ஏற்ற காலம் மகாளய பட்ச காலமாகும்
ஒரு மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும். அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் எனவும் பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் எனவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதே போல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள்
மகாளய பட்சம் என்றால் என்ன?
மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்பதே ஆலயம். அதாவது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம்
இத்தகைய சிறப்பு மிக்க மகாளய பட்சம் இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 14 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது. மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை
மகாளய அமாவாசையின் சிறப்பு? மாதந்தோறும் வரும் அமாவாசை திதி, முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றது என்றாலும், வருடத்தில் வரும் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவையாகும். தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசையில் பித்ருக்கள் நம்முடன் தங்கி இருந்து நாம் செய்யும் தர்ப்பணங்களை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய காலம். தை அமாவாசை என்பது பித்ருக்கள் நமக்கு ஆசி வழங்கி விட்டு, மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்பட்டு செல்லும் காலமாகும்.
இவற்றில் மற்ற பித்ரு தர்பணம் கொடுக்க எளிய வழிமுறை?
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள்.
பித்ரு தர்பணம் கொடுக்க எளிய வழிமுறை?
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள். அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும். அல்லது சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்னு வலது கையில் எள் எடுத்து பின்பு தூய பாத்திரத்தில் தூய நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும்
பின்பு அந்த நீரை கடல், ஆறு, ஏரி, குளம் பகுதிகளில் விட்டலாம்.இந்த வருடம் மகாளய பட்சம் அக்டோபர் 14ஆம் தேதி வருகிறது. முன்னோர்களையும், உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் என்று அனைத்து காருண்ய பித்ருக்களையும் நினைத்து வழிபாடு செய்யுங்கள். இயன்ற அளவு தானங்கள் செய்து முன்னோரது அருளாசியை பெறுங்கள்.
0 Comments