Ad Code

Responsive Advertisement

8 வது முறை - உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வென்றது இந்தியா

 



உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 முறை வீழ்த்தியது இந்தியா.


உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 192 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் 191 ரன்னுக்கு சுருண்டது.


இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 10 அணிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.


இதில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரர் இஷான் கிஷான் நீக்கப்பட்டு சுப்மன் கில் மீண்டும் சேர்க்கப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி, அஷ்வின் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.


பாகிஸ்தான் அணி 42.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 191 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கேப்டன் பாபர் ஆசம் (50), முகமது ரிஸ்வான் (49), இமாம்-உல்-ஹக் (36), அப்துல்லா ஷபிக் (20) ஓரளவு கைகொடுத்தனர். இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 2, விக்கெட் கைப்பற்றினர்.


192 ரன் என்ற எளிதாக வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை தொடர்களில் 8 வது முறையாக பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 86 ரன்களும் ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியமாக இருந்தனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement