சேலம் மாவட்டம் சின்னசேலத்தில் சாலையில் கேட்பாரின்றி சுற்றி திரிந்த 3 வயது குழந்தையை மீட்ட 10 வயது சிறுவனுடன் அந்த குழந்தை நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தலைவாசல் அருகே ஆறுகளூரை சேர்ந்த சின்னதுரை என்பவர் குடும்ப சண்டை காரணமாக தனது 3 வயது குழந்தையை சின்னசேலத்தில் அனாதையாக விட்டு சென்றுள்ளார்.
குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த கோகுல் என்ற சிறுவன் அதனை மீட்டிருக்கிறார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தையை குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தும் பலன் இல்லாததால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தன்னை மீட்டு பல மணி நேரம் பார்த்து கொண்ட சிறுவனை விட்டு பிரிய குழந்தை மறுத்ததால் கோகுலும் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அங்கும் குழந்தையின் பாசப்போராட்டம் தொடர்ந்தது.
0 Comments