Ad Code

Responsive Advertisement

அரிசியில் வண்டுகள் கிட்ட நெருங்காது - இதை ட்ரை பண்ணுங்க

 



பொதுவாகவே ஈரக் கைகளுடன் அரிசியில் கை வைத்தால் புழு , வண்டு பிடிக்கும். எனவே ஈரமான கைகளுடன் அரிசியில் கை வைக்காதீர்கள்.


அரிசி அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள் என்றாலும், பிரியாணி அரிசி, பச்சரிசி, இட்லி அரிசி போன்றவற்றை ஸ்டாக் வைத்து எப்போதாவதுதான் சமைப்போம். எனவே அவை வண்டு அல்லது புழு வைத்து கெட்டுப்போய்விடும். இதனால் சில நேரங்களில் பயன்படுத்த முடியாமல் கொட்டிவிடுவோம். இதுபோல் இனி நடக்காமல் இருக்க இந்த டிப்ஸை கவனியுங்கள்.


பொதுவாகவே ஈரக் கைகளுடன் அரிசியில் கை வைத்தால் புழு , வண்டு பிடிக்கும். எனவே ஈரமான கைகளுடன் அரிசியில் கை வைக்காதீர்கள். ஈரமான தன்மை இருந்தாலும் வண்டு , புழு வைக்கும். எனவே அவ்வபோது வெயிலில் காய வைத்து மீண்டும் டப்பாவில் போட்டு வைக்க அரிசி எப்போதும் பளபளப்பாக இருக்கும்.


பிரியாணி இலை : பிரியாணி இலைகளின் வாசத்தால் புழு, வண்டு பிடிக்காது. அரிசியை எப்போதும் ஃபிரெஷாக வைக்க உதவும். எனவே 4-5 பிரியாணி இலைகளை அரிசியில் கலந்து வையுங்கள்.


கிராம்பு : கிராம்பும் வாசனை நிறைந்த மூலிகையாகும். எனவே 10 கிராம்பு எடுத்து அரிசியில் கலந்துவிடுங்கள். வண்டு பிடிக்காது.


பூண்டு : பூண்டு நறுமணத்திற்கும் புழு , வண்டு பிடிக்காது. எனவே சில பூண்டுகளை அரிசியில் கலந்து வைக்கவும்.


குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம் : பலரும் பருப்பு மற்றும் கொட்டை வகைகளை நீண்ட நாட்களுக்கு வண்டு வைக்காமல் இருக்க ஃபிரிட்ஜில் வைப்பார்கள். அப்படி அரிசியையும் ஃபிரிட்ஜில் வைத்தால் வண்டு வராது. இதை டிரை பண்ணி பாருங்க.


சூரிய ஒளி : முன்பே கூறியதுபோல் அரிசியை சூரிய ஒளியில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் காய வைத்து எடுங்கள். இவ்வாறு செய்ய வண்டு, புழு எதுவும் பிடிக்காது. இது அரிசிக்கு மட்டுமல்ல பருப்பு வகைகளையும் காய வைத்து எடுக்க ஃபிரெஷாக இருக்கும்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement