உடல் பருமன் என்பது இன்றைய நாட்களில் பெரும் பிரச்சனைகளாக உள்ளது. அதிகரித்துவரும் உடல் எடையை குறைக்க அனைவரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
டயட் முதல் வொர்க்அவுட் வரை அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள். உடல் எடையை இயற்கையாக குறைக்க சீரக தண்ணீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பது உதவியாக இருக்கும். எனவே எடை குறைப்பதில் சீரக தண்ணீர் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சீரகம் தண்ணீர் செய்வது எப்படி?
முதலில், சீரக விதைகளை வாணலியில் குறைந்த வெப்பத்தில் வாசனை வரும் வரை வறுக்கவும்.இப்போது சீரகத்தை ஆறவைத்து,மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
இப்போது ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரைத்த சீரகத்தை சேர்க்கவும்.சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே கொதிக்க விடவும்.
பின்னர், அதை வடிகட்டவும்.சுவைக்காக, நீங்கள் அதில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது சிறிது தேன் சேர்க்கலாம்.
சீரகத் தண்ணீர் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். வேகமான வளர்சிதை மாற்றம் ஓய்வில் இருக்கும்போது அதிக கலோரிகளை எரிக்கிறது, இது எடை இழப்புக்கு உதவும்.
சீரகத் தண்ணீர் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இது உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. சிறந்த செரிமானம் வீக்கம் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும், இதனால் எடை குறையத் தொடங்கும்.
சீரகத் தண்ணீரில் இயற்கையாகவே பசியை அடக்கும் பண்பு உள்ளது. இதன் மூலம் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதை குறைக்கலாம்.
சீரகத் தண்ணீர் இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இதுவும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
0 Comments