Ad Code

Responsive Advertisement

சமயலறையில் படிந்துள்ள எண்ணெய் கரை - எப்படி சுத்தம் செய்யலாம்?

 



நாம் அனைவருக்கும் நமது வீடு எப்போதும் பளிச்சென்றும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற இருக்கும். ஆனால் நம்மால் வீட்டை எப்போதும் பளிச்சென்று வைத்துக்கொள்ள முடியாது காரணம், நேரமின்மை. அதனால் மாதத்தில் ஒரு நாள் நாம் வீட்டை புரட்டிப்போட்டு சுத்தம் செய்வோம். இப்படி செய்யும் போது நமது உடல் சோர்வை சந்திக்கும். ஆனாலும் அந்த நாளிலே நம்மால் சுத்தம் செய்துமுடிக்க முடியாது. 


ஒவ்வொரு பொருளும் அதன் இடத்தில் தான் இருக்கின்றதா என கண்டறிவவே அறை நாள் சென்று விடும். அதுவும் நமது வீட்டின் சமையல் அறையில் உள்ள கறைகளை சுத்தம் செய்ய நமக்கு தனியாக ஒரு நாள் தேவைப்படும். அதுவும் குறிப்பாக எண்ணெய் கறைகளை சுத்தம் செய்ய மிகவும் போராடவேண்டியிருக்கும். 


நீங்களும் இந்த மாதிரியெல்லாம் பிரச்சனைகளை சந்தித்து இருந்தால், கவலை வேண்டாம் மிகவும் எளிமையாக உங்க வீட்டு சமையல் அறையில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கரையை போக்க சில டிப்ஸ். 


சமையலறையே புதிதாக வைத்து கொள்வதற்கு டிப்ஸ்:


நீங்கள் சமையல் செய்யும் அடுப்பிற்கு பின்னல் இருக்கும் டைல்ஸ்களில் எண்ணெய் கறை படிந்து, பிசுபிசுப்புடன் ஒரு அழுக்கான சுவர் உருவாகிவிடும்.


இந்த கரையை போக்க,


தேவையான பொருட்கள் :

சமையல் சோடா,

எலுமிச்சை சாறு

பாத்திரம் தேய்க்கும் லிக்விட்


சுத்தம் செய்யும் முறை:

பாத்திரம் தேய்க்கும் லிக்விட் உடன் சிறு துளி எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து அதனை ஸ்கிரப்பர் பயன்படுத்தி சுவரில் நன்றாக தேய்த்து பின்னர் தண்ணீர் கொண்டு கழுவி விட்டு ஈரத் துணியால் துவைத்தல் போதும் உங்கள் சமையல் அறை புதியது போன்று பளிச்சென்று இருக்கும்.


வாஷ்பேஷன், சிங்க் போன்ற இடங்களில் துர்நாற்றம் வீசினால் அதில் சுடு நீருடன் எலுமிச்சை சாறு கலந்து துவாரத்தில் ஊற்றினால் அடைப்புகள் நீங்கி, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement