Ad Code

Responsive Advertisement

Vikram lander ல் இருந்து பிரிந்தது Pragyan Rover – அடுத்த 14 நாட்கள் குறித்த அலசல்!

 



இந்தியாவின் சாதனையான சந்திராயன்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டு அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்துள்ளது.


சந்திராயன்- 3:


இந்தியாவின் சந்திராயன் -3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய வரலாற்று தருணத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் அது நிலவில் தனிமங்களையும், தாதுக்களையும் கண்டறியும் வகையில் ரோவர் அடுத்த 14 நாட்கள் ஆய்வு நடத்த இருக்கிறது. இந்நிலையில் அடுத்து லேண்டர் செய்ய இருக்கும் வேலைகளை பற்றி பார்க்கலாம்.


அதாவது நிலவில் 15 நாட்கள் பகல், 15 நாட்கள் இரவாக இருக்கும். இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யா ரோவர் சோலார் பேனல்கள் மூலம் செயல்பட கூடியது. அதனால் சூரிய வெளிச்சம் இருக்கும் 14 நாட்கள் மட்டுமே அதன் ஆயுட்காலம். அதனால் இந்த 14 நாட்கள் லேண்டரும், ரோவரும் இணைந்து பல ஆய்வுகளை செய்ய இருக்கிறது. மொத்தம் 4 ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. அவை, ராம்பா (ரேடியோ அனாடமி ஆப் மூன் பவுண்ட் ஹைபர்சென்சிடிவ் அயனோஸ்பியர் அண்ட் அட்மாஸ்பியர்), சேஸ்ட் (சந்திராஸ் சர்பேஸ் தெர்மோ பிசிகல் எக்ஸ்பிரிமென்ட்), ஐஎல்எஸ்ஏ (இன்ஸ்ட்ரூமென்ட் பார் லூனார் செய்ஸ்மிக் ஆக்டிவிட்டி), எல்ஆர்ஏ (லேசர் ரிடிரோரெப்ளக்டர் அர்ரே) ஆகும்.


அதில் ராம்பா நிலவின் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய இருக்கிறது. நிலவில் வளிமண்டலம் இல்லை என்பதால், பகலில் அதிக வெயிலும், இரவில் அதிக குளிரும் இருக்கும். இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் ராம்பா கருவி ஆய்வு செய்யும். மேலும் இதை வைத்து நிலவின் வயது கணக்கீடு செய்யப்படும். அதன் பின் சேஸ்ட் கருவி நிலவில் உள்ள பாறை, கற்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யும். ஐஎல்எஸ்ஏ கருவி, நிலவின் மேற்பரப்பில் நிலவும் அதிர்வுகளை ஆய்வு செய்யும். எல்ஆர்ஏ கருவி, நிலவின் சுழற்சியை ஆய்வு செய்யும். நிலவு பூமியை சுற்றி வரும் போது அதன் இயக்கம் குறித்தும், அதிர்வுகள் குறித்தும் ஆய்வு செய்யும்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement