உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற போட்டியில் பிரக்ஞானந்தாவை முதல்நிலை வீரர் கார்ல்சன் வீழ்த்தினார்.
இறுதிப் போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. டைபிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டின் கார்ல்சன் மகுடம் சூடினார். உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார்.
0 Comments